நவம்பர் மாதம் 38 கோடி டொலர்களை அனுப்பிய இலங்கையர்கள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 38 கோடி அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
11 மாதங்களில் 331 கோடி டொலர்களை அனுப்பிய இலங்கையர்கள்

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலத்தில் 331 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
வெளிநாடுகளில் தொழில் புரியும் மற்றும் வசித்து வரும் இலங்கையர்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைப்பது அதிகரித்து வருவதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வேலை வாய்ப்பின்மையானது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 4.3 வீதமாக இருந்தது எனவும் இரண்டாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 4.6 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam