ஈரானில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலில் இலங்கையர்கள்: வெளியான தகவல்
ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (07.08.2023) தி அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு எண்ணெய் கப்பல்கள், நாட்டின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கப்பல்களும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கைப்பற்றப்பட்ட போதிலும், அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டவையாகும் என்பது தெளிவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றிய ஈரான்
மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய எட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கப்பல் முதலில் ஏப்ரல் 27ஆம் திகதியன்று ஈரானால் கைப்பற்றப்பட்டது.
அதில் 23 இந்தியர்கள் மற்றும் ஒரு ரஷ்யர் பணியமர்த்தப்பட்டனர்.
இந்தக்கப்பல், தமது பயணத்தில் எந்த ஒழுங்கற்ற நடத்தையையும் காட்டவில்லை என்றாலும், கப்பல் மற்றொரு கப்பலைத் தாக்கியதன் காரணமாகவே கைப்பற்றப்பட்டதாக தெஹ்ரான் கூறியுள்ளது.
அமெரிக்க எரிசக்தி நிறுவனம்
இந்த எட்வான்டேஜ் ஸ்வீட், கலிபோர்னியாவின் சான் ரமோனைச் சேர்ந்த அமெரிக்க எரிசக்தி நிறுவனமான செவ்ரான் கோர்ப்பரேஷனுக்காக குவைத்தின் மசகு எண்ணெய்யை எடுத்துச்சென்றது.
இதனையடுத்து கடந்த புதன்கிழமையன்று, ஈரானின் துணை இராணுவப் புரட்சிக் காவலர்களால், இரண்டாவது கப்பலான நியோவி, பனாமா கொடியிடப்பட்ட கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு கடற்கரையில் உள்ள புஜைராவுக்குச் செல்லும்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தக்கப்பலிலேயே, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படையினர் பணியாற்றியதாகக்
கிரேக்கக் கடலோர காவல்படை கூறியுள்ளது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
