கேரள மண்சரிவில் சிக்கி இலங்கையர்கள் உயிரிழப்பு
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டு 295 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்கள் உயிரிழப்பு
இந்த நிலையில், இந்த மண்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri