வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்! வெளியான தகவல்
இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாத காலத்தினுள் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்
இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் பொதுமக்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்று நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக கணிசமான இலங்கையர்கள் ஜப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.