வெளிநாடொன்றிலிருந்து தப்பியோடும் இலங்கையர்கள்: சிக்கப்போகும் பெருந்தொகை தங்கம் - பணம்
டுபாயில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு தலைமறைவாக இருக்கும் இலங்கை பாதாள உலகக் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கிருந்து தப்பியோட முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு செய்திகளை உருவாக்குதல் மற்றும் அரபு நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், டுபாயில் தங்கியிருந்த இலங்கை நாட்டவர்கள் சிலர் தற்போது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுமையான நடவடிக்கை
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்களுக்கு எதிராக டுபாய் பொலிஸார் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்படும் நபர்களிடம் உள்ள தங்க நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் டுபாய் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது.
அதன்பின்னர், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய புள்ளிகள் பலர் டுபாயில் மறைந்திருந்து, ஈரான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மாபியா குழுக்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை குற்றவாளிகள்
இவ்வாறு ஈரானிய கடத்தல் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் இலங்கை குற்றவாளிகள் குறித்த தகவல்களையும் தற்போது டுபாய் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கமைய, அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நம்பகமான வட்டாரங்களுக்கமைய, இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாஷிக், ஆல்டோ தர்மே, ரன் மல்லி உள்ளிட்ட பல குற்றவாளிகள் தற்போது டுபாய் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரத்திற்கமைய, டுபாயில் கைது செய்யப்பட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 50 இலங்கை நாட்டவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri