பாகிஸ்தானில் மோசடி மையம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இலங்கையர்கள் கைது
பாகிஸ்தானில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை, அந்த நாட்டின் புலனாய்வுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோசடி அழைப்பு மையம்
பைசலாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பணியாற்றிய நிலையிலேயே இந்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தமாக 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள்
அவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், 8 நைஜீரியர்கள், 4 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு பங்களாதேஸ் நாட்டவர்கள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வே நாட்டவர் மற்றும் இரு இலங்கையர்கள் அடங்குகின்றனர்.

இந்த மோசடி அழைப்பு மையத்தில், அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்றுக் கூறி, பெரும் தொகை மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri