பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதியளிக்கும் பாகிஸ்தான்: சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்வதாக சர்வதேச அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச நிதிக்கண்காணிப்பு குழு, இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதன்படி, ஹவாலா, கிரிப்டோ, அரச சார்பற்ற அமைப்புக்கள், இணையத் தளங்கள் வாயிலாக, பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி கிடைப்பதற்கு, பாகிஸ்தானிய அரசாங்கம் உதவுவதாக குறித்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் முயற்சியில் இந்த சர்வதேச நிதிக்கண்காணிப்பு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
நிதியுதவி
இந்தநிலையில், குறித்த அமைப்பின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி செய்வதற்காக இந்தியாவும் குறித்த சர்வதேச அமைப்பிடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |