ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற இலங்கையர்கள் பலர் கைது
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் ஹங்கேரி எல்லையூடாக தப்பிச்சென்ற 37 இலங்கையர்கள் உட்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருட்களை ஏற்றச்சென்ற மூன்று லொறிகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியில் இருந்து 35 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
துருக்கியர்கள் கைது
அதேநேரம் போலந்துக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற இரண்டாவது லொறியில் மறைந்திருந்த நிலையில் 20 துருக்கியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூன்றாவது லொறி வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்கு பயணித்த நிலையில் அதில் இருந்து 15 பங்களாதேஸ் மற்றும் எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ருமேனியா எல்லைப்படையினர், மோப்ப நாய்களின் உதவியுடனேயே எல்லைக்கடந்து சென்ற
இலங்கையர்களையும் ஏனையோரையும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan