உக்ரைனில் ஐந்து இலங்கையர்கள் அதிரடியாக கைது
ரஷ்ய போருக்கு சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள்
இது தொடர்பில், சம்பந்தப்பட்ட இலங்கையர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு? Manithan

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
