இலங்கை பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி: பொதுநலவாய செயலாளர் நாயகம்
அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் பாரத்தை இலங்கை தொடர்ந்து உணர்கிறது.இந்தநிலையில் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை ஒவ்வொரு இலங்கையர்களும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி
மேலும் கூறுகையில்,இலங்கை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை உணர்கிறது என்பதை தாம் அறிந்துள்ளோம். அழுத்தத்தை தாங்குவது கடினமாக இருக்கும்.
இந்தநிலையில் நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே நாம் இலங்கைக்கு வந்துள்ளோம்.
இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின் சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.