மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள்: விசாரணைகள் நிறைவு
மியான்மார் (Myanmar) இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார (J.M. Janaka Priyantha Bandara) தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் தாய்லாந்து (Thailand) எல்லையை ஒட்டிய பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 56 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை மியான்மருக்கு அழைத்துச் சென்றே, அங்கு இணைய குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கை
இவர்களுள் 8 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி, இணைய தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இன்னும் 48 இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam