ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
கடுமையான மோசடி நடவடிக்கைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விமான நிறுவன ஊழியர்களாக நடித்து, வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் தனிநபர்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நிதித்தகவல்களை பெற்று மோசடி
மோசடியாளர்கள் பல்வேறு மொபைல் செயலிகளை நிறுவ தொலைபேசித் திரையை பகிரவோ அல்லது ஒருமுறை கடவுச்சொற்கள், வங்கி பின் எண்கள், கடன் அட்டை விபரங்கள் அல்லது பிற முக்கியமான நிதித் தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

இருப்பினும், பயணச்சீட்டு முன்பதிவு, விளம்பரத்திட்டங்கள் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் தனது நிறுவனம் வாடிக்கையாளர்களை தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வதில்லை என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறுகின்றது.
இத்தகைய மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற சம்பவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பமுறைப்பாடு செய்யுமாறும் விமான நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது.
இதேவேளை, விளம்பரத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் தகவல்தொடர்புகளை விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் மூலமாக மட்டுமே சரிபார்க்க வேண்டும் என்றும் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam