சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கை இளைஞன்! அவுஸ்திரேலிய நீதிமன்றம் கொடுத்த சிறைத் தண்டனை
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நீதிமன்றம் இலங்கை மாணவனுக்கு 13 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இலங்கையின் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான ரண்பதி அமரசிங்க என்ற இளைஞனுக்கு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. சிறுமிகளை அச்சுறுத்தியதாக இளைஞனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு இளைஞன், சிறுமிகளை அச்சுறுத்தியுள்ளார். படங்களை அனுப்பவில்லை என்றால், போலி படங்களை தயாரித்து அவற்றை சிறுமிகளின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைக்க போவதாக இளைஞன் மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் சந்தேக நபரான இளைஞனை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தனர். விசாரணைகளில் இளைஞன் 10 வயதான சிறுமிகளை கூட இவ்வாறு அச்சுறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
பொலிஸார் வழக்கு விக்டோரியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இளைஞனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டனை முடிந்த பின்னர், இளைஞன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என கூறப்படுகிறது.