ஸ்பெயினில் காணாமல் போன இலங்கையின் மல்யுத்த வீரர்கள்
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த போட்டியில் கலந்து்ககொள்ள சென்றிருந்த மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக விளையாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காணாமல் போன இரண்டு வீரர்கள்
ஆறு ஆண் மல்யுத்த வீரர்களை கொண்ட இந்த அணியில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி இரண்டு பேர் காணாமல் போனதுடன் மூன்றாவது வீரர் அண்மையில் காணாமல் போனதாக இலங்கை மல்யுத்த விளையாட்டு சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது ஐரோப்பாவுக்கு செல்லும் இலங்கை விளையாட்டு வீரர் காணாமல் போகும் சம்பவங்களின் புதிய சம்பவம். ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றிருந்த 9 வீர, வீராங்கனைகளும், ஒரு அதிகாரியும் காணாமல் போனார்.
விளையாட்டு அதிகாரிகளின் கவனமின்மை காரணமாகவே மல்யுத்த வீரர்கள் காணாமல் போயிருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பல தசாப்தங்களுக்கு பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. அதிகரித்துள்ள பணவீக்கம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக இலங்கை இளைஞர்கள் சட்ட ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் வெளிநாடுகளுக்கு செல்ல அக்கறை காட்டி வருகின்றனர்.
காணாமல் போன இலங்கை வீரர்கள் தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன் இலங்கை அதிகாரிகள் காணாமல் போன மர்யுத்த வீரர்களின் குடும்பங்களுடன் தொடர்புக்கொண்டு, காணாமல் போனவர்கள் ஸ்பெயினில் இருக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.
ஸ்பெயின் சென்றிருந்த மல்யுத்த வீரர்கள் காணாமல் போனமை சம்பந்தமாக இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரிகள் உடனடியாக ஸ்பெயின் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர்.
ஒரு வீரரின் கடவுச்சீட்டு எங்கு இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை
காணாமல் போன மல்யுத்த வீரர்களுக்கு ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வழமையாக வெளிநாடுகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களின் கடவுச்சீட்டுக்களை அதிகாரிகள் தமது பொறுப்பில் வைத்திருப்பார்கள்.
காணாமல் போன இரண்டு வீரர்களின் கடவுச்சீட்டுக்கள் அதிகாரிகளிடம் இருப்பதுடன் மற்றைய வீரர் கடவுச்சீட்டை எங்கிருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை தெரிவிக்கப்படுகிறது.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
