தென்கொரியாவில் தவறாக நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர்! அந்நாட்டு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
தென்கொரியாவில் இலங்கை தொழிலாளர் ஒருவர் தவறாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியுங் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியாவின் நாஜுவில் உள்ள தொழிற்சாலையொன்றில் இலங்கை தொழிலாளர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் மூலம் கட்டி வைக்கப்பட்டு நகர்த்தப்பட்டதைக் காட்டும் காணொளியொன்று வெளியானதையடுத்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மோசமாக நடத்தப்பட்டதற்கான சான்று
இந்தச் செயலை "சகிக்க மற்றும் தெளிவான மனித உரிமை மீறல்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி லீ, தென் கொரியாவின் உலகளாவிய பிம்பம் குறித்து அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தினார்.
அத்தகைய வன்முறையை தடுக்க யதார்த்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
சில பணியிடங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான சான்றாக தொழிலாளர் அமைச்சு இந்த காணொளியை ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், மற்றொரு இலங்கை தொழிலாளரால் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் இந்த காட்சிகள் தென்கொரிய மனித உரிமை ஆர்வலர்களால் வெளியிடப்பட்டன.



