சிம்பாப்வேயில் சிக்கிக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
சிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக சிம்பாப்வே உட்பட சில ஆபிரிக்க நாடுகளின் பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.
இந்த நிலைமையில், இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள Omicron என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, அங்கோலா, போஸ்வானா, மொசாம்பிக், லசதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
