ஓமானுக்கு அழைத்து செல்லப்படும் இலங்கைப் பெண்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்து செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவலின் மத்தியில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பெண்களில் சுமார் 12 பேர் நேற்று அங்கிருந்து பலாத்காரமாக ஓமானுக்கு அழைத்து செல்லப்பட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
செயலிழக்கச் செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள்
நேற்று முன்தினம் (15) ஓமானுக்கு குறித்த பெண்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
இந்த பெண்களில் ஒருவரது கணவர் கொழும்பின் ஊடகத்துக்கு தெரிவித்துள்ள தகவலில், தமது மனைவி, சுற்றுலா விசாவில் அழைத்துச்செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவர் திரும்பி வர விரும்புகின்றபோதிலும், அவரை அழைத்துச் சென்றவர்கள், செலவீனங்களை ஈடு செய்ய 400,000 ரூபாவை கோருவதாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பெண்கள் சுற்றுலா விசாவில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் கையடக்க தொலைபேசிகளை வேலைவாய்ப்பு முகவர் தரகர்கள் எடுத்துச் சென்றுள்ளார்.
விற்பனை செய்யப்படும் பெண்கள்
பின்னர் அவர்களை தரகர்கள் வீட்டில் அடைத்து வைத்தனர். முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில், அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி இந்த வீட்டுக்கு சென்றுள்ளது. இந்த தூதரக பிரிவின் அதிகாரிகள் பெண்களிடம் கையொப்பம் பெற்று, தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அங்கு பணிபுரிய சம்மதம் தெரிவித்தும் கடிதங்களை பெற்றுள்ளனர்.
எனினும் கடவுச்சீட்டில் உள்ள தமது மனைவியின் கையெழுத்துக்கும் இந்தக் கடிதத்துக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது என்று குறித்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதம் கிடைத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தமது மனைவி உட்பட்ட குழுவினர் ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பெண்களை ஓமனுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் வேறு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு அரேபியர்களுக்கு விற்கப்படுகிறார்கள்.
அழகான இளம் பெண்கள் முதலில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் ஓமன் மதிப்பில் 1 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரை விற்கப்படுகிறார்கள்.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த பெண்கள்
இளையவர்கள் அதிக விலை. பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர். இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த மோசடிக்கு உள்ளாகி ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த பெண்கள் பாதுகாப்பான வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கும் அவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமானில் பெண் ஒருவரை அதிகாரி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அவரை தனது வீட்டிற்கு வருமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஓமானில் இலங்கைப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்
இலங்கையின் பொது பாதுகாப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்கள், பொலிஸ் மா
அதிபர் உள்ளிட்ட தரப்பினர் நேற்று கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
