பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பிய பெண் அதிரடியாக கைது
பிரித்தானியாவில் வசித்த பெண் இராணுவ மருத்துவர் ஒருவர், இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பிரித்தானியாவில் வசிக்கும் தனது கணவர் மீதான அளவற்ற அன்பின் காரணமாக, இராணுவ சட்டங்களை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
இலங்கை இராணுவ மருத்துவமனையில் கேப்டன் தரவரிசையில் பணியாற்றி வந்த இவர், இந்தியாவின் மும்பை வழியாக இலங்கை வந்தடைந்தார்.
உடனடியாகக் கைது
அவர் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டைச் சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது, அவர் இராணுவத்தால் தேடப்பட்டு வரும் நபர் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
பணியைப் புறக்கணித்துவிட்டு வெளிநாடு சென்ற குறித்த பெண், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாடு திரும்ப முற்பட்ட போதே அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.
சந்தேக நபரான பெண்ணின் கணவர் ஒரு மருத்துவர் எனவும் அவர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வருவதும் தெரியவந்துள்ளது.