குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு
குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம், வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.
குலசிங்க ஆராச்சிலாகே அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினர்கள் அல்லது அவருக்குத் தெரிந்தவர்கள் இருந்தால், தங்களுக்கு விரைவில் அறிவிக்கவும்.
அமைச்சை தொடர்புகொள்க
உயிரிழந்ததாக கூறப்படும் பெண் இலக்கம் 438/1, நுகாவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பவர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரேனும் அறிந்தால், அமைச்சின் தொலைபேசி இலக்கம்: 011238836/ 0117711163/ 0112323015, மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, 2வது மாடி, செலிங்கோ கட்டிடம் கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக அமைச்சுக்கு அறிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




