மலேசியாவில் மர்மமாக உயிரிழந்த இலங்கை பணிப்பெண்! இலங்கை தூதரகம் விடுத்துள்ள கோரிக்கை
மலேசியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் மரணித்தமை தொடர்பில் அந்த நாட்டு காவல்துறை பிரதானிக்கும், உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலை நாளைய தினம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை - கல்ஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் வீட்டுப் பணிப்பெண்ணாக மலேசியா சென்றிருந்த நிலையில்,அங்கு அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில், வெளிவிகார அமைச்சு மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அது குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில், அந்த நாட்டு காவல்துறை பிரதானிக்கும், உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
