இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவி!
அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கைகள் தொடர்பான ஆலோசகராக இலங்கையை பூர்விகமாக கொண்ட பெண்ணொருவர் நியமிக்கபட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. ரோஹினி கொசோக்லு என்ற பெண்ணொருவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.
அமெரிக்க செனட் சபையின் துணை தலைவராக கமலா ஹாரிஸ் பதவிவகித்த காலப்பகுதியில், அவரின் நிர்வாக பிரிவின் தலைமை நிர்வாகியாக ரோஹினி கொசோக்லு செயற்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க - ஆசியப் பெண் என்ற பெருமையையையும் அவர் பெற்றார்.
ரோஹினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களாவர்.
ரோஹினி கொசோக்லு, ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும்போது கடிதத் தொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார்.
பட்டம் பெற்ற பின்னர் ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராக பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.