சிங்கப்பூரில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
சிங்கப்பூரின் கட்டோங் மாகாணத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் அறையில் வைத்து மனைவியைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கையரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 வயதான இஷான் கோட்டகே என்ற இளைஞன், தனது மனைவியைக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 32 வயதுடைய தியவின்னகே செவ்வந்தி மதுக குமாரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த கொலைச் சம்பவம் கடந்த 9 ஆம் திகதி கட்டோங் சதுக்கத்தில் உள்ள 'ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்' சுற்றுலா விடுதி அறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் இஷான் கோட்டகே என்ற இளைஞன் 1.5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொலையை ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞனின் வாக்குமூலத்திற்கமைய பொலிஸார் ஹோட்டல் அறைக்குச் சென்றபோது செவ்வந்தி மதுகா குமாரி வெட்டுக்காயங்களுடன் சடலமாக காணப்பட்டதாகவும், வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கத்தி அருகிலேயே காணப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)
இந்நிலையில், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட இஷான் கோட்டகே, காணொளி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, ஒரு வார காலம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சந்தேநபர் மொழிபெயர்ப்பாளர் மூலம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வழக்கறிஞரைத் தொடர்புகொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த நேரத்தில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டெம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.