இத்தாலிக்கு வர மறுத்த இலங்கை மனைவி! கணவர் எடுத்த விபரீத முடிவு
இத்தாலிக்கு வர மனைவி மறுத்ததால், இலங்கையை சேர்ந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் 26 வயதுடைய மனைவி பிபிலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிதாபமாக உயிரிழப்பு
இந்நிலையில் இத்தாலிக்கு வருமாறு கணவர் பலமுறை மனைவியிடம் கூறியுள்ளார்.
எனினும் குறித்த பெண் இத்தாலிக்கு செல்ல மறுத்துவிட்டதாக அங்கு வசிக்கும் உயிரிழந்தவரின் சகோதரர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து விரக்தியில் குறித்த பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை உயிரிழந்தவரின் மனைவி, கணவனின் உடலை ஏற்க மறுத்ததால், இறந்தவரின் சகோதரரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

பல சர்ச்சைகளை கடந்து குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் எங்கு சென்றுள்ளார் தெரியுமா... போட்டோ இதோ Cineulagam
