மிஸ்டர் வேல்ட் 2024 இல் வரலாறு படைத்த இலங்கையர்
வியட்நாமில்(Vietnam) நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையின் மேக்கா சூரியராச்சி மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.
இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் “தேசிய ஆடை மக்கள் தெரிவு” விருதையும் அவர் பெற்றார்.
இந்தநிலையில் மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக்கா சூரியராச்சி படைத்துள்ளார்.
கலாசார பிரதிநிதித்துவம்
அவரது கலாசார பிரதிநிதித்துவத்திற்கு ஒரு சான்றாக, மேகாவிற்கு அதற்கான விருது வழங்கப்பட்டது.

இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தை தனது உடையின் மூலம் சூரியராச்சி வெளிப்படுத்தியதாகவும்,. அவரது ஆடை நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களின் கவணத்தையும் ஈர்த்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        