ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயம்
ரஷ்யாவின் - அலபுகா (Russia - Yelabuga) நகருக்கு அருகில் உக்ரைனின் இராணுவ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உட்பட்ட 14 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வௌயாகியுள்ளன.
ரஷ்யாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள அலபுகா பொலிடெக் (Alabuga Polytech) எனப்படும் கல்லூரி விடுதி ஒன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதலின் போது காயமடைந்தோரில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள்
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தவர்கள் என ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்த 14 பேரில் கிர்கிஸ்தான்(Kyrgyzstan), சிம்பாப்வே(Zimbabwe), ருவாண்டா(Rwanda), கொங்கோ(Congo), கென்யா(Kenya), நைஜீரியா (Nigeria) மற்றும் தெற்கு சூடான் (South Sudan) நாட்டவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |