தலாய் லாமாவிடம் கையளிக்கப்படவுள்ள புத்தபெருமானின் நினைவுச்சின்னங்கள்
இலங்கையில் உள்ள புனித கோயிலில் அமைந்துள்ள புத்தபெருமானின் புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் தலாய் லாமாவிடம் கையளிக்கப்படும் என்று தலாய் லாமா அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த புனித நினைவுச்சின்னங்கள் இலங்கையில் உள்ள புத்த கோயிலான ராஜகுரு சிறிசுபுதி வஸ்கடுவ மகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (04.04.2024) கையளிக்கப்படவுள்ளது.
சீன அரசாங்கம்
இந்த கபிலவஸ்து நினைவுச் சின்னங்கள் மகத்தான வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
இது பக்தர்களை புத்தரின் ஆழமான பாரம்பரியத்துடன் இணைக்கிறது என்று தலாய் லாமாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
#WATCH | Himachal Pradesh: Most Venerable Waskaduwe Mahindawamsa Nayaka Thero from of Kapilavastu Rajaguru Sri Sbhuthi Maha Vihara, Waskaduwa, Sri Lanka offers Gautama Buddha’s sacred relic to His Holiness the Dalai Lama.
— ANI (@ANI) April 4, 2024
The Kapilavastu relics hold immense historical and… pic.twitter.com/U4Gri76RYv
வஸ்கடுவவில் உள்ள சிறிசுபூதி மகா விகாரையில் புத்த பகவானின் 21 நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தலாய் லாமாவுக்கு இந்த புனித சின்னங்களை இலங்கை வழங்குவது தொடர்பாக அவரை வெறுக்கும் சீன அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |