மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி! தசுன் ஷானகவின் கோரிக்கை
ஒரே நாளில் கிரிக்கெட் மற்றும் வலைபந்து இரண்டிலும் ஆசியாவின் சாம்பியனானது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் வலைபந்தாட்ட வீரர்கள் மீது கிரிக்கெட்டைப் போல கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மிக உயர்ந்த நிலையில் இலங்கை கிரிக்கெட்
பின்னடைவில் இருந்த இலங்கை கிரிக்கெட் தற்போது மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், அதனை விட கிரிக்கெட்டில் மட்டும் அல்ல மற்ற விளையாட்டுகளிலும் இலங்கை முன் செல்வது அவசியம் எனவும் அவர் கூறினார்.

வலைபந்தாட்ட வீரர்கள் மீது கிரிக்கெட்டைப் போல கவனம் செலுத்தப்படவில்லை. எனவே, கிரிக்கெட்டைப் போன்று மற்ற விளையாட்டுக்களும் கவனம் செலுத்த வேண்டும்.
மற்ற விளையாட்டுக்களும், கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் இடத்தை ஊடகங்கள் கொடுக்க வேண்டும்.ஏனைய விளையாட்டுகளிலும் திறமைசாலிகள் அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் இடம் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள காரணமாக இருக்கும் என்றும் தசுன் ஷானக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 31 நிமிடங்கள் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan