ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
இறுதிப் போட்டியில் அபார வெற்றியை ஈட்டி இலங்கை அணி நாட்டின் நற்பெயரை மீண்டும் சர்வதேசத்தில் உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புகழாரம்
தலைமைத்துவம் மற்றும் அணியின் ஏனைய வீரர்களின் எல்லையில்லா அர்ப்பணிப்பு என்பனவே இந்த அனைத்து வெற்றிகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையிலும், அனைவரும் வெற்றியை நோக்கி செய்த பொதுவான அர்ப்பணிப்பு கிரிக்கெட் உலகிற்கு மட்டுமன்றி ஏனைய துறைகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த அபார வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
