விசா பெறத் தவறியதால் வாய்ப்பை இழந்த இலங்கை அணி
சரியான நேரத்தில் விசாக்களைப் பெறத் தவறியதால், இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஸ்பெய்ன் ஜிப்ரால்டரில் நடைபெறும் வலைப்பந்து உலக இளைஞர் கிண்ணம் 2025இல் இருந்து விலகியுள்ளது.
இதனால், இலங்கை அணி அனைத்து குழு நிலை போட்டிகளையும் இழக்க நேரிட்டுள்ளது.
21 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கும்
இந்த நிலையில், இலங்கை மற்றும் சாம்பியா ஆகிய இரண்டு அணிகளும் "தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக" போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதாக உலக வலைப்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, அவர்களின் திட்டமிடப்பட்ட போட்டிகள் தோல்விகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், போட்டி விதிகளின்படி எதிர் அனைகளுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன.
ஜிப்ரால்டர், ஒரு பிரிட்டிஷ் ஆளுகைப் பிரதேசமாகையால், வீரர்கள் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் மூலமே விசாக்களைப் பெற வேண்டும்.
உலகம் முழுவதிலுமிருந்து 21 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கும் உலக இளைஞர் கிண்ணப் போட்டிகள், 2025, செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் 28 வரை ஜிப்ரால்டரில் நடைபெறுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam