தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள்
தமிழக கடல் வழியாகக் கனடாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாகத் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று(4) மாலை ராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 27 பேர் படகு ஒன்றின் மூலம் கடல் வழியாகக் கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.
கேரளா வழியாகக் கனடா செல்ல திட்டமிட்டு மதுரையில் தங்கியிருந்த 27 பேரையும் ராமநாதபுரம், மதுரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் இலங்கையிலிருந்து கனடா தப்பிச் செல்ல மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழர் 32 பேரை மங்களூர் கியூ பிரிவு பொலிஸார் ஜூன் மாதம் 11ஆம் திகதி மாலை கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணத்தில் சிலர் அடைக்கலம் கொடுத்து வேதாளை கடற்கரையிலிருந்து மர்மப் படகில் இலங்கைக்குத் தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்படி இலங்கை தமிழர்கள் சிலரை மங்களுரூ தனிப்படையினர் ஜூன் மாதம் 20ஆம் திகதி அழைத்து வந்து வேதாளை கடல் பகுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்குச் சமீபத்தில் மாற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அதிகாரி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று(4) ராமநாதபுரம் வந்தனர். மண்டபம் அருகே வேதாளை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளைப் பார்வையிட்டனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவரைப் பிடித்து ராமநாதபுரத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.


திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
