இலங்கை தமிழர்கள் ஸ்டாலினை கடவுளாக பார்க்கிறார்கள்: - அமைச்சர் துரைமுருகன்
இலங்கை தமிழர்கள் ஸ்டாலினை கடவுளாக பார்க்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், மேல்மொணவூரில் இலங்கை முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,
பாலாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நல்ல ஆட்சியில் நாடு செழிக்கிறது. 6 மாத ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார்.
அரசு திட்டங்களை தீட்டி முடிவுகள் எடுப்பதில் மற்ற மாநில முதல்வர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார். ஸ்டாலின் போல முதல்வராக இருக்க வேண்டும் என மஹா., முதல்வர் கூறுகிறார். உள்நாடு, வெளிநாடு பத்திரிக்கைகள் புகழ்கின்றனர்.
6 மாத ஆட்சியில் எந்த தவற்றையும் சுட்டிக் காட்ட முடியாதபடி ஸ்டாலின் இருக்கிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். திட்டங்களை தீட்டுவதிலும், வறுமையில் வாடும் ஏழைகளை தேடிச்சென்று உதவிகள் செய்து வருகிறார்.
நம்மை யார் காப்பாற்றுவார்கள் என ஏங்கிக் கிடந்த இலங்கை தமிழர் இதயத்தை வருடி நானிருக்கிறேன் என்று முதல்வர் கூறுகிறார்.இதனால் இலங்கை தமிழர்கள் ஸ்டாலினை கடவுளாக பார்க்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுரிமை தர தயாராக இருக்கிறோம்.
உங்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம். ஸ்டாலின் வந்த நேரம் வேலுார் மாவட்டத்தில், ஏரிகள் நிரம்பி வழிகிறது. வேலுாரில் நாங்கள் தஞ்சையை பார்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
