மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தடை! சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை மிரட்டிய பொலிஸார்
முல்லைத்தீவில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை காரணம் கூறாது பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த முல்லைத்தீவு பொலிஸார், 'இறந்தவர்களை நினைவுகூரத் தடை' என்று தெரிவித்ததுடன், இது தொடர்பில் இன்னும் பல அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வடக்குமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் முல்லைத்தீவில் மாவட்ட தலைவி ம.ஈஸ்வரி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு நகர வர்த்தக சங்க தலைவர் க.கௌரிராசா, சமூக செயற்பாட்டாளர்களான பேதுருப்புள்ளை ஜெபநேசன், சிவநேசராசா ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் ஒரு காகிதத்தில் அழைப்பை எழுதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கு (நேற்று) வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்குச் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தலைமை வகிக்கக்கூடாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியையும் பொலிஸார் கொடுத்து அதை வாசிக்கும்படி தெரிவித்து அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி: ராகேஷ்
மாவீரர் துயிலும் இல்லம்
கடந்த யுத்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களது வித்துடல்கள்
விதைக்கப்பட்ட அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வருடம் நவம்பர் 27ஆம்
திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
துயிலும் இல்ல வளாகத்தை முற்றாக ஆக்கிரமித்துள்ள 24 ஆவது சிங்க ரெஜிமண்ட் படையினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீதி ஓரத்தில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று 17.11.2022 சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிரமதான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
