சமூக நிந்திததலை எதிர்த்து யாழ். மக்களும் கட்சிகளும் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்!
சமூக நிந்திததலை எதிர்த்து யாழ். மக்களும் கட்சிகளும் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் ஒழுங்கு செய்திருந்த மலையக அரசியல் கட்சிகளின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையிலே யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்களை நிந்திக்க தக்கதாக ஒரு காணொளியினை வெளியிட்டுயிருந்தார்.
நிந்திக்கும் பேச்சு
அதன் எதிரொளியாக மலையத்திலும் மலையகத்திற்கு வெளியிலும் ஏன் சர்வதேச ரீதியிலும் இது தொடர்பாக பல்வேறு ரீதியான பிரதிபளிப்புக்களை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்திருக்கின்றோம். அவரது செயப்பாடுகள் மக்கள் பிரதிநிதியாக பல சந்தர்ப்பங்களில் அறுவறுக்கத்தக்கதாகவே இருந்திருக்கிறது.
அதை பற்றி தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது, அவருடைய நிலைப்பாடு இந்த நாட்டிலே தேசிய இனமாக இருக்கக்கூடிய அவரது கருத்து தொடர்பாக பிரதிபளிப்பு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த வகையில் மலையக சிவில் அமைப்புக்கள் ஐசிசிபிஆர் என்கின்ற சட்டத்தின் அடிப்படையில் அவர் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைபாடு ஒன்றினை செய்துள்ளார்கள்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 14 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam