வடக்கு தமிழர்களை இலக்கு வைத்து சீனா அதி முக்கிய நகர்வுகள் (Video)
இந்தியாவை நாங்கள் அளவுக்கு மீறி நம்பவும் கூடாது. இந்தியாவின் நிலைப்பாடு முழுமையாக எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நாங்கள் கொள்ளக்கூடாது என சமூக செயற்பாட்டாளர் செல்வின் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆனால் எங்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இலங்கை தீவைப் பொறுத்தவரை இந்த உலக நாடுகள் எல்லாம் பார்க்கின்ற விடயம் என்னவென்று சொன்னால் இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரம் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றதோ அவர்களுடைய மனம் கோணாமல் தாங்கள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.
இலங்கையில் 72 வீதமான மக்கள் சிங்கள பெரும்பான்மையினர். அந்த சிங்கள பெரும்பான்மையினரால் தான் இந்த ஆட்சிக் கட்டமைப்பு செய்யப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வடக்குத் தமிழர்களை இலக்கு வைத்து சீனா மேற்கொள்ளும் இரகசிய நகர்வுகள் குறித்தும் அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,