உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே..! முன்னாள் இந்திய துணைத்தூதர்
உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே என முன்னாள் இந்திய துணை தூதர் நடராஜன் (Nadarajan) தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் கலாசார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுக் கொள்கை
மேலும் தெரிவிக்கையில், “இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் என்று கூறுவார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் அல்ல இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று தான் கூற வேண்டும்.
சமீபத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருந்தார்.
தற்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக பக்கத்து நாடுகளுடனான உறவே முக்கியமாக இருக்கிறது.
வெளிவராத சம்பவங்கள்
பத்து நாடுகளில் நான் பணி புரிந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி அதை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளேன்.
இந்த புத்தகத்தில் இலங்கையில் நான் பணியாற்றிய அனுபவங்களையும், போர் காலத்தில் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டனர், போர்க்களத்தில் நடந்த பல வெளிவராத சம்பவங்களையும் பதிவு செய்துள்ளேன்.
அத்துடன் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |