பிரான்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழர் உட்பட 26 பேர் கைது
பிரான்ஸில் சட்டவிரோத பண பரிமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் 28 வீடுகள், பத்துக் கடைகள் மற்றும் வியாபார மையங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 11 மில்லியன் யூரோ பெறுமதியான கறுப்புப் பணம் மற்றும் தங்க நகைகள், சொகுசு வாகனங்கள் உட்படப் பெருமளவான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிதி மோசடி
கைது செய்யப்பட்டவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபடும் வலையமைப்பின் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுகின்ற தமிழ் பூசகர் ஒருவரும் அடங்கியுள்ளார்.
பாரிஸ் புறநகரப் பகுதியாகிய சென்ரெனியில் அமைந்தள்ள தனது ஆலயத்தை நிதி வசூல் செய்யும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இடைத் தரகர்கள்
இந்த வலையமைப்பில் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் யூரோ சட்டவிரோத தங்க ஆபரண இடைத் தரகர்கள் சிலருக்கும் தொடர்புள்ளது எனவும் அவர்களில் சிலரும் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, இலங்கை, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களைச் சட்டவிரோதமான முறையில் அகதிகளை பிரான்ஸுக்குக் கடத்தும் செயலில் நீண்ட காலம் ஈடுபட்டுவந்தாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You My Like This Video