இலங்கை தமிழருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்!
இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடா நாட்டில் லொட்டரி சீட்டிழுப்பில் பெரும் தொகை பணப்பரிசு கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் Barrie நகரில் வசிக்கும் 42 வயதான பிரதீபன் சிவராசா என்பவருக்கே இந்த பணப்பரிசு கிடைத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lotto Max என்ற லொட்டரியில் பிரதீபன் சிவராசாவிற்கு $5,00,000 பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இது, இலங்கை மதிப்பில் சுமார் ஒன்பது கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் காரணமாக அவர் செய்து வந்த தொழில் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணப்பரிசு கிடைத்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதீபன் தெரிவித்துள்ளதாவது,
கோவிட் சமயத்தில் என் பணியாளர்கள் வருவாயின்றி தவிப்பதை நான் விரும்பவில்லை. எனவே என் பணத்தில் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வந்தேன்.
இந்த லொட்டரி மூலம் கிடைத்த பணத்தை என் தொழிலில் முதலீடு செய்வேன். இவ்வளவு தொகைக்கான காசோலை எனக்கு தான் என்பதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை என்று பிரதீபன் சிவராசா தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri