பிரான்ஸ் வரலாற்றில் இடம் பிடித்த இலங்கை தமிழனுக்கு யாழில் கெளரவிப்பு (Video)
பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (baguette) தயாரிக்கும் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (14.08.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி வழங்கிய வாய்ப்பு
இதன்போது வெற்றியாளருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் தற்போது பாரிஸில் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
பிரான்ஸில் வருடாவருடம் இடம்பெறும் பாரம்பரிய சுவையான பாண் தயாரிப்பு போட்டியில் இவ்வாண்டுக்கான வெற்றியாளராக தர்ஷன் மாறியுள்ளார். குறித்த போட்டியில் பங்குபற்றிய 126 போட்டியாளர்களுள் தர்ஷன் செல்வராஜா வெற்றிபெற்றுள்ளார்.
அதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பாண் வழங்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்துள்ளதுள்மை குறிப்பிடத்தக்கது.











யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 18 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
