இலங்கை தமிழ் ஏதிலிகள் சென்னையில் போராட்டம்: வெளியான காரணம்
தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 இலங்கை தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டமானது நேற்று முன்தினம் (05.06.2023) இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையைக் குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஏதிலி அந்தஸ்து தமது சுதந்திரத்தையும் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
தங்கள் பிள்ளைகளுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், தனியார் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை, அரச வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
இலங்கை ஏதிலிகள்
எனவே, அவர்களில் பலர் அன்றாடக் கூலி வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஈழ ஏதிலிகள் தெரிவித்துள்ளனர். முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை ஏதிலிகள் இந்தியாவில் அதிக காலம் தங்கியதற்காக அபராதம் செலுத்த வேண்டும்.
பல ஏதிலிகள் தாயகம் திரும்ப அல்லது தங்கள் உறவினர்களைப் பார்க்க விரும்பினாலும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் தங்கத் தொடங்கிய ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 3600 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அத்துடன் வீசாவைப் பெறுவதற்கு 13,500 ரூபாயை செலுத்தவேண்டியுள்ளதாக ஏதிலியாக வாழ்ந்துவரும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஜி ஞானராஜா தெரிவித்துள்ளார்.
20,000 பேர் இலங்கைக்குத் திரும்ப விருப்பம்
ஞானராஜா 1983ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் வட இலங்கையில் உள்ள கிளிநொச்சியை விட்டு தனது பெற்றோருடன் இந்தியாவிற்குச் சென்றார்.
33 வருடங்கள் ஆகியும் தமக்கும் குடும்பத்தினருக்கும் நிவாரண அட்டையோ,ஆதார் அட்டையோ வழங்கப்படவில்லை, ஈழ ஏதிலிகள் என்ற அடையாள அட்டைகள் மட்டுமே உள்ளன என்று ஞானராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் ஏதிலிகளில் சுமார் 20,000 பேர் இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாக ஞானராஜா ஒப்புக்கொண்டாலும், நாட்டில் உள்ள சமூக-அரசியல் நிலப்பரப்பு பலருக்கு நம்பிக்கையைத் தூண்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
