பிரான்ஸில் மனைவி, பிள்ளைகளை துன்புறுத்திய இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த வருடம் 2ஆம் திகதி மிக அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் ஜோசப் கே.வின் மகள் தாயாருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
அதேவேளை, ஜோசப் கேவின் வதிவிட அனுமதி காலவதியான நிலையில், அவர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குடும்பத்தினருடன் அவர் இணைந்து இருப்பது, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ஜோசப் கே.க்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.