அவுஸ்திரேலியாவில் போராடி வெற்றி பெற்ற இலங்கை தமிழ் குடும்பம்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட நடேசன் - பிரியா தம்பதி குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கல்வி கற்பதற்கான வேலை பார்ப்பதற்கான பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுதுறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் தனது அதிகாரங்களை பயன்படுத்திமூன்று மாத பிரிட்ஜிங் விசாவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுநலன் அடிப்படையில் அமைச்சருக்கு தலையிடுவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ள புலம்பெயர்வு சட்டத்தின் 195 ஏ பிரிவினை பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் மருத்துவ கிசிச்சைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் முடிவடையும் வரை அந்த குடும்பத்தின் மூவர் பேர்த்தில் மூன்று மாதம் பிரிட்ஜிங் விசாவில் தங்கியிருப்பதற்கு இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான்காவது உறுப்பினரின் விசா நிலையில் இன்னமும் மாற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பேர்த் சமூகத்தில் தமிழ் குடும்பத்தினர் மருத்துவ கல்விசேவைகளை தொடர்ந்தும் பெறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தந்தை, தாய் மற்றும் ஆறு வயது கோபிகா ஆகியோருக்கே பிரிஜிங் விசா வழங்கப்பட்டுள்ளது.
தர்ணிகா விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளமையினால், அவருக்கு அந்த விசா வழங்கப்படவில்லை இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் பேர்த்தில் இருந்து வெளியேற முடியாது.