இலங்கை மாணவர்களின் அசாத்திய திறமை : பாடசாலையில் உருவாக்கப்பட்ட கார்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன பாடசாலையின் 13 தரம் பொறியியல் மாணவர்கள் குழுவொன்று கார் ஒன்றை உருவாக்கியுள்ளது.
கினிகத்தேன பாடசாலையின் பொறியியல் தொழில்நுட்பத்தை சேர்ந்த கலாநிதி இந்திக்க காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் தொழில்நுட்ப மாணவனான கலன கௌசல்ய தலைமையிலான மாணவர்கள் குழுவொன்று இந்த காரை உருவாக்கி அதற்கு Gcianz Black Bullet எனப் பெயரிட்டுள்ளது.
தனது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று இவ்வாறான காரை உருவாக்குவது இதுவே முதல் முறை என கினிகத்ஹேன பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
கார் தயாரிக்கும் மாணவர்கள்
அணியின் தலைவர் கலன கௌசல்ய, கார் இயந்திரவியலில் விசேட அறிவும் திறமையும் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 புத்தாக்க பாடசாலை மாணவர்களில் கினிகத்தேனை பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களும் அடங்குவதாகவும், அவ்வாறான மாணவர்களின் ஆக்கத்திறன்களை வளர்த்து தனது பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதன் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த கார் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.