பெங்களூரில் இலங்கை மாணவனுக்கு நேர்ந்த மோசமான சம்பவம்
பெங்களூரைச் சேர்ந்த 24 வயதுடைய இலங்கையர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் நட்பு கொண்ட ஒருவரால் ஒன்லைன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸாரால் தாக்கல் செய்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் ஒன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.
பின்னர் குறித்த நபர் மாணவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, காணொளி அழைப்புகளின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது அனுமதியின்றி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இரகசியமாக எடுத்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டுகிறார்.
அச்சுறுத்தல்
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நீக்க பணம் கோரியுள்ளார். பாதிக்கப்பட்டவர் பணம் கொடுக்க மறுத்ததால், மாணவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு காணொளி அனுப்பி சமூக ஊடக தளங்களில் பதிவேற்றுவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதற்கு பயந்து, அவருக்கு 36,000 ரூபாய் இந்திய ரூபா கொடுத்துள்ளார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பணம் கோரியுள்ளார்.
கொடுக்க மறுத்ததால் இலங்கை மாணவர் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |