அவுஸ்திரேலியாவில் உயிருக்கு போராடும் இலங்கை மாணவன்
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
28 வயதான கீத் மதுஷங்க என்ற இளைஞன் பெர்த்தில் Langford உள்ள BP பெட்ரோல் நிலையத்தில் மே 25 அன்று இரவு 10 மணியளவில் தாக்கப்பட்டார்.
Cyril Benedict Garlett என அடையாளம் காணப்பட்ட 30 வயதுடைய தாக்குதலாளி, மதுஷங்கவைத் தள்ளிவிட்டு, பின்னர் அவரது முகத்தில் குத்தியதாகவும், இதனால் அவர் விழுந்து தலையில் அடிபட்டதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மாணவன் மீது தாக்குதல்
கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து பெர்த்தில் படித்து வரும் மதுஷங்க, சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகும் ராயல் பெர்த் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுஷங்கவின் நண்பர்கள் GoFundMe இணையத்தளம் ஊடாக அவரது சிகிச்சைக்காக பணம் திரட்டி வருகின்றனர்.
இதுவரை 9,000 டொலர் திரட்டியுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய Garlett மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
