நாட்டை விட்டு செல்ல தயாரான இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டிய வெளியேறும் அட்டையை இலங்கையர்கள் அணுக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை அதன் வலைத்தளத்தின் மூலம் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தது.
இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தொடர்புடைய அட்டையை நிரப்பும்போது விண்ணப்பதாரரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை உள்ளிட வேண்டும்.
OTP இலக்கம்
பின்னர் அந்த கையடக்க தொலைபேசிக்கு ஒரு OTP இலக்கம் அனுப்பப்படும். இருப்பினும், பலர் தங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்ட பிறகு OTP இலக்கத்தை பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் அட்டையை இலங்கையர்கள் அணுக முடியாத நிலைமை ஏற்பட்டு கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri