இத்தாலியில் மர்மநபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
இத்தாலியின் நேப்போலி நகரில் இலங்கையர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்தியால் குத்தப்பட்டு காயங்களுக்குள்ளான நபர் பெல்லெக்ரினி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதல்
56 வயதுடைய இலங்கையர் காயங்களுடன் தாமாகவே வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளுக்கமைய, இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, அந்த நபரின் வலது தோள்பட்டையில் கத்திக்குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சையின் பின்னர் 56 வயதான அந்த இலங்கையர் 10 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான பின்னணி மற்றும் காரணங்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.