ரஷ்யாவிலிருந்து நாட்டுக்கு வர மறுப்பு தெரிவித்த இலங்கை இராணுவத்தினர்!
ரஷ்ய வாடகைப்படையில் இணைந்து கொள்வதற்காக அந்நாட்டுக்கு சென்று போரில் காயமடைந்த இலங்கையர்களில், எவரும் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அவர்கள் ரஷ்யாவில் குடியுரிமை பெறுவார்கள் என நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தாரக பாலசூரிய இன்று (29) கேகாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறியுள்ளார்.
இராஜதந்திர விவாதம்
எங்களில் ஒரு குழு ரஷ்யாவுக்குச் சென்று, பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆகியோருடன் இராஜதந்திர மட்டத்தில் விவாதித்தோம். அங்கு 464 பேர் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 8 அரச அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அண்மையில் ரஷ்யாக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam