இரத்தினகல்லில் சிக்கிய தமிழர் தாயகம் - இலங்கையில் அபூர்வ இரத்தினகல்
இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்ததாக அறிவித்துள்ளார்.
இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தை சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரே குறித்த இரத்தின கல்லை கொள்வனவு செய்துள்ளார்.
நீல இரத்தினகல்லை கரவிட்ட இரத்தினகல் சேகரிக்கும் ஒருவரிடம் கொள்வனவு செய்ததாக வர்த்தகர் ரொஹான் வசந்த தெரிவித்துள்ளார்.
குறித்த இரத்தினகல்லில் இலங்கையின் நிலத் திட்டத்தையும் யாழ் குடாநாடு எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதனையும் பார்க்கலாம்.
இரத்தினகல்
மன்னார், திருகோணமலை உட்பட இலங்கையின் நான்கு திசைகளும் அதில் காட்சியளிக்கின்றன.
இரத்தினம் மற்றும் நகைகள் ஆணையத்திடம் குறித்த இரத்தினகல் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 24ஆம் திகதியன்று அடையாள சோதனை அறிக்கை பெறப்பட்டது.
இந்த இரத்தினக்கல் இயற்கையான கொருண்டம் இனத்தைச் சேர்ந்ததென குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |