நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட தகவல்
நாட்டின் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தி சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்ந்து சிறந்த நிலைமையிலேயே உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு
அத்துடன், ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
முப்படையினர் விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதனை முற்றாக நிறுத்தி பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் ஈடுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முப்படை அதிகாரி
விகாரைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள முப்படை அதிகாரிகளும் நீக்கப்படுவார்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அங்குள்ளவர்களை நீக்குவதற்கு இதுவரையில் தீர்மானிக்கவில்லை. அது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுவரையில் முப்படையினர் தொடர்ந்து விகாரைகளுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.