செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் தேடும் இலங்கையர்
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதனை ஆய்வு எக்ஸோமார்ஸ் ரோவரின் தொழில்நுட்ப தலைவராக இலங்கை பொறியாளர் இந்திரஜித் மஹிலால் டி சில்வா பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.
அவர் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் எக்ஸமார்ஸ் என்ற ரோபோ ரோவரின் தொழில்நுட்ப துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.
எக்ஸோமர்ஸ் ரோவரை ஒருங்கிணைத்து பரிசோதிப்பதே அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். “நான் இந்த திட்டத்தின் தலைமை தொழில்துறை பொறியாளராக பணிபுரிகிறேன்.
எக்ஸோமார்ஸ் ரோவர்
எக்ஸோமார்ஸ் ரோவரை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்யும் பணியை நான் பெற்றுள்ளேன்” ன மஹிலால் டி சில்வா பிபிசி சேவையிடம் தெரிவித்தார்.
1976 ஆம் ஆண்டு பிறந்த மஹிலால் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மூன்று பாடசாலைகளில் பயின்றார். கொழும்பு இசிபதன வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலை என்பனவற்றில் அவர் கல்வி பயின்றுள்ளார்.
எனது பாடசாலை நாட்கள் எனது தொழில்முறை மற்றும் கல்வி வெற்றியின் பிரதிபலிப்பாகும். நான் படித்து 19 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியில் உறுப்பினராக பணியாற்றினேன். இந்த வெற்றிக்கு எனது தாயும் தந்தையும் முக்கிய செல்வாக்கு செலுத்தினர். வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையையும், என்னை நம்புவது எப்படி என்பதையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான்” என மஹிலால் டி சில்வா நினைவு கூர்ந்தார்.
பொறியியல் பட்டம்
அவர் 1999 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக பிரித்தானியாவில் குடிபெயர்ந்தார். லண்டனில் உள்ள கின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்ட எக்ஸமார்ஸ் ரோவர் திட்டத்தின் முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதாகும்.
ஐரோப்பாவிலிருந்து செவ்வாய்க்கு செல்லும் முதல் ரோவர் இதுவாகும். ஆனால் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக இங்கு நடவடிக்கைகள் சற்று தடைபட்டுள்ளன.
எக்ஸமார்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுமார் 2 மீட்டர் ஆழம் தோண்டி மண் மாதிரிகளை எடுக்கப் போவதாகவும், மண் மாதிரிகளில் உயிரினங்கள் உள்ளதா அல்லது படிமமாக்கப்பட்ட நுண்ணுயிரிகள் உள்ளதா என்று சோதிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.